Posts

Showing posts from 2021

இரண்டாம் தாய்

பிஞ்சுப் பாதங்கள் முதலில் புவி படாமல் தாங்கியபோதும்; காதணிவிழாவில் ஓரணி அணிவதற்குள் கதறிய அழுகையால் பதறியபோதும்; அம்மா என்று அழைப்பதற்க்குள் அப்பாயென்ற கொஞ்சல் கேட்டபோதும்; நடுநிசிகனவில் துக்கத்தைக் கலைத்து நெஞ்சில் விசும்பியபடியே தூங்கியபோதும்; ஒற்றைமுறையே நோய்ப்படுக்கையில் கண்டு ஓராயிரமிரவுகள் மனம் கணந்திட்டபோதும்; முதல்காதலின் வலியில் துலைந்திட்டபோது மனமுன்னில் அதிகமாய் வலித்திட்டபோதும் அடக்கிவைத்த அன்புத்துளிகள் கண்ணில் ஆர்ப்பரித்து கொட்டுதடி! - நீ ஆனந்தக் கடலில் மிதந்தே அடுத்தமனை புகும்பொழுது - என் இரண்டாம் தாயே உனைப்பிரியும் இக்கணமே உயிர்ப்பிரிவதாய் உணர்கிறேனே!

காதல் தேவதை

  இயற்கை அன்னை யினிகழ்ச்சி காளானேன் இம்மண்ணுயிர் வாழ்க்கை க்குமந்த விண்ணுலக வேந்தர்க்குமிடை கலகமுற காரணமானேன் - நான் வேறேதும் செய்தில்லை உனையுருகி நினைத்ததொழிய.   அகண்ட வெளியிலே அற்புதம் புரிந்தவள் உயிரூட்டம் கொண்ட ஒற்றைக் கோளவள் நிலமகள் முதலவளாவாள் மற்றோர்க்கு – என் உளமகள் நீயின்றி என்னுயிரூட்டம் இல்லாதே   நிரின்றி அமையாது உலகென்றான் பெருந்தகை பரிணாம தினடிப்படை என்றான் அறி வி யலான் இருவரு மிழைக்க வில்லைப்பிழை – என் உலகென்பது உ ன்னால் அமையப்பெறு வதினாலே   காற்று வெளியிடையில் காதலை சொன்னாலும் காற்றைடைத்த பைதான் மெய்யென் றுணர்ந்தாலும் நின்றிடுமே என்சுவாச மொருகணத்தில் – என் நினைவினில் சிந்தைகணமேனும் நீங்கினால் ந ீ     உருகொண்ட அக்கினி யாகத்தின் உச்சாணி ஊண்கொண்டு சேர்ப்பதூ மிதுவே தேவர்க்கும் கொடுப்பதூ மிதூவே அழிப்பதுமிதுவே - என் நடுஆகம் நிறைந்திட்ட உயிர்த்தீயும் நீயே   அனைத்தையும் அடக்கிய ஆகாச வெளியாம் அண்டவும் அடையவும் முடியாத முடிவிலியாம் பிரம்ம...