இரண்டாம் தாய்

பிஞ்சுப் பாதங்கள் முதலில்

புவி படாமல் தாங்கியபோதும்;

காதணிவிழாவில் ஓரணி அணிவதற்குள்

கதறிய அழுகையால் பதறியபோதும்;

அம்மா என்று அழைப்பதற்க்குள்

அப்பாயென்ற கொஞ்சல் கேட்டபோதும்;

நடுநிசிகனவில் துக்கத்தைக் கலைத்து

நெஞ்சில் விசும்பியபடியே தூங்கியபோதும்;

ஒற்றைமுறையே நோய்ப்படுக்கையில் கண்டு

ஓராயிரமிரவுகள் மனம் கணந்திட்டபோதும்;

முதல்காதலின் வலியில் துலைந்திட்டபோது

மனமுன்னில் அதிகமாய் வலித்திட்டபோதும்

அடக்கிவைத்த அன்புத்துளிகள் கண்ணில்

ஆர்ப்பரித்து கொட்டுதடி! - நீ

ஆனந்தக் கடலில் மிதந்தே

அடுத்தமனை புகும்பொழுது - என்

இரண்டாம் தாயே உனைப்பிரியும்

இக்கணமே உயிர்ப்பிரிவதாய் உணர்கிறேனே!

Comments

Popular posts from this blog

என் கவிதை - முத்துநகர்

மழை-- என் கவிதை.......!

பாரதியார் கவிதைகள்-1