என் கவிதை - முத்துநகர்

தும்பை அணிந்த னையோ பூமிமங்கை என
பார்த்ததும் வியப்ப ளிக்கும் - எட்டுத்
திசையிலும் கண் எட்டும் வரையிலும்
பரந்தெங்கும் தெரியும் உப்ப ளங்கள்!


ஆயிர மாயிரம் ஆண்டுகளாய் அள்ளித்
தரும் அன்னைமடியா ழங்கண்டு - எங்கும்
அணிக்கணி சேர்க்கும் முத்துக் குளித்து
தமிழ் மண்ணின் புகழ்சேர்க்கும் முத்துநகர்!


ஈன்றவனுக்கு இன்பத்தமிழ் ஈன்ற அழகனவன்
தமிழ்க்குறத்தி உடன் அருள்புரியும் - அவன்
அறுபடையில் ஒரு படையாய் விளங்கும்
திருச் செந்தூர் கொண்ட திருநகரம்!


தாய் நாட்டின் துயர்துடைக்க பரங்கியர்தம்
பரையறுத்த மறையராம் பொம்மன் - முதல்
தீரமிக்க வாஞ்சி உடன்சீர்மிகு சிதம்பரமுங்கூட
பாகைக் கவிஞனையும் சேர்த்தளித்த வீரநகர்!

அகன்ற வனங்களினூடே ஓடும் ஓடைகள்
கரைபுரண்டோடும் கண்மாய்கள் - அதனருகில்
இன்பக்களி யாட்டம் போடும் தோகைமயிலென
கண்கொள்ளா இயற்கையின் இளையமகள் - எந்தன் நகர்!

Comments

Popular posts from this blog

மழை-- என் கவிதை.......!

பாரதியார் கவிதைகள்-1