காதல் தேவதை

 

இயற்கை அன்னை யினிகழ்ச்சி காளானேன்

இம்மண்ணுயிர் வாழ்க்கை க்குமந்த விண்ணுலக

வேந்தர்க்குமிடை கலகமுற காரணமானேன் - நான்

வேறேதும் செய்தில்லை உனையுருகி நினைத்ததொழிய.

 

அகண்ட வெளியிலே அற்புதம் புரிந்தவள்

உயிரூட்டம் கொண்ட ஒற்றைக் கோளவள்

நிலமகள் முதலவளாவாள் மற்றோர்க்கு என்

உளமகள் நீயின்றி என்னுயிரூட்டம் இல்லாதே

 

நிரின்றி அமையாது உலகென்றான் பெருந்தகை

பரிணாம தினடிப்படை என்றான் அறிவியலான்

இருவரு மிழைக்க வில்லைப்பிழைஎன்

உலகென்பது ன்னால் அமையப்பெறு வதினாலே

 

காற்று வெளியிடையில் காதலை சொன்னாலும்

காற்றைடைத்த பைதான் மெய்யென் றுணர்ந்தாலும்

நின்றிடுமே என்சுவாச மொருகணத்தில்என்

நினைவினில் சிந்தைகணமேனும் நீங்கினால்

  

உருகொண்ட அக்கினி யாகத்தின் உச்சாணி

ஊண்கொண்டு சேர்ப்பதூ மிதுவே தேவர்க்கும்

கொடுப்பதூ மிதூவே அழிப்பதுமிதுவே - என்

நடுஆகம் நிறைந்திட்ட உயிர்த்தீயும் நீயே

 

அனைத்தையும் அடக்கிய ஆகாச வெளியாம்

அண்டவும் அடையவும் முடியாத முடிவிலியாம்

பிரம்மவடிவமாய் தோற்றத்தின் முதலுமாமது என்

காரிகைக்குப் பின்னே கடுகாய்த் தெரிவதேனோ?

 

ஆயிரம் யுகங்களாய் ஆட்டுவைத்த அகந்தைதான்

கயல்விழி யாள்நீ ஒருவுருவாய் தோன்றி

சிற்றானுலகின் ஐம்பூதங் களானதினால் எனை

குற்றனாய்க் கூடிக்குறை யிட்டார் பேருந்தேவர்.

 

-      நிரஞ்சன் குமார்

Comments

Popular posts from this blog

என் கவிதை - முத்துநகர்

மழை-- என் கவிதை.......!

பாரதியார் கவிதைகள்-1