Posts

இரண்டாம் தாய்

பிஞ்சுப் பாதங்கள் முதலில் புவி படாமல் தாங்கியபோதும்; காதணிவிழாவில் ஓரணி அணிவதற்குள் கதறிய அழுகையால் பதறியபோதும்; அம்மா என்று அழைப்பதற்க்குள் அப்பாயென்ற கொஞ்சல் கேட்டபோதும்; நடுநிசிகனவில் துக்கத்தைக் கலைத்து நெஞ்சில் விசும்பியபடியே தூங்கியபோதும்; ஒற்றைமுறையே நோய்ப்படுக்கையில் கண்டு ஓராயிரமிரவுகள் மனம் கணந்திட்டபோதும்; முதல்காதலின் வலியில் துலைந்திட்டபோது மனமுன்னில் அதிகமாய் வலித்திட்டபோதும் அடக்கிவைத்த அன்புத்துளிகள் கண்ணில் ஆர்ப்பரித்து கொட்டுதடி! - நீ ஆனந்தக் கடலில் மிதந்தே அடுத்தமனை புகும்பொழுது - என் இரண்டாம் தாயே உனைப்பிரியும் இக்கணமே உயிர்ப்பிரிவதாய் உணர்கிறேனே!

காதல் தேவதை

  இயற்கை அன்னை யினிகழ்ச்சி காளானேன் இம்மண்ணுயிர் வாழ்க்கை க்குமந்த விண்ணுலக வேந்தர்க்குமிடை கலகமுற காரணமானேன் - நான் வேறேதும் செய்தில்லை உனையுருகி நினைத்ததொழிய.   அகண்ட வெளியிலே அற்புதம் புரிந்தவள் உயிரூட்டம் கொண்ட ஒற்றைக் கோளவள் நிலமகள் முதலவளாவாள் மற்றோர்க்கு – என் உளமகள் நீயின்றி என்னுயிரூட்டம் இல்லாதே   நிரின்றி அமையாது உலகென்றான் பெருந்தகை பரிணாம தினடிப்படை என்றான் அறி வி யலான் இருவரு மிழைக்க வில்லைப்பிழை – என் உலகென்பது உ ன்னால் அமையப்பெறு வதினாலே   காற்று வெளியிடையில் காதலை சொன்னாலும் காற்றைடைத்த பைதான் மெய்யென் றுணர்ந்தாலும் நின்றிடுமே என்சுவாச மொருகணத்தில் – என் நினைவினில் சிந்தைகணமேனும் நீங்கினால் ந ீ     உருகொண்ட அக்கினி யாகத்தின் உச்சாணி ஊண்கொண்டு சேர்ப்பதூ மிதுவே தேவர்க்கும் கொடுப்பதூ மிதூவே அழிப்பதுமிதுவே - என் நடுஆகம் நிறைந்திட்ட உயிர்த்தீயும் நீயே   அனைத்தையும் அடக்கிய ஆகாச வெளியாம் அண்டவும் அடையவும் முடியாத முடிவிலியாம் பிரம்ம...

என் கவிதை - முத்துநகர்

தும்பை அணிந்த னையோ பூமிமங்கை என பார்த்ததும் வியப்ப ளிக்கும் - எட்டுத் திசையிலும் கண் எட்டும் வரையிலும் பரந்தெங்கும் தெரியும் உப்ப ளங்கள்! ஆயிர மாயிரம் ஆண்டுகளாய் அள்ளித் தரும் அன்னைமடியா ழங்கண்டு - எங்கும் அணிக்கணி சேர்க்கும் முத்துக் குளித்து தமிழ் மண்ணின் புகழ்சேர்க்கும் முத்துநகர்! ஈன்றவனுக்கு இன்பத்தமிழ் ஈன்ற அழகனவன் தமிழ்க்குறத்தி உடன் அருள்புரியும் - அவன் அறுபடையில் ஒரு படையாய் விளங்கும் திருச் செந்தூர் கொண்ட திருநகரம்! தாய் நாட்டின் துயர்துடைக்க பரங்கியர்தம் பரையறுத்த மறையராம் பொம்மன் - முதல் தீரமிக்க வாஞ்சி உடன்சீர்மிகு சிதம்பரமுங்கூட பாகைக் கவிஞனையும் சேர்த்தளித்த வீரநகர்! அகன்ற வனங்களினூடே ஓடும் ஓடைகள் கரைபுரண்டோடும் கண்மாய்கள் - அதனருகில் இன்பக்களி யாட்டம் போடும் தோகைமயிலென கண்கொள்ளா இயற்கையின் இளையமகள் - எந்தன் நகர்!

பாரதி வாழ்க்கைப் பதிவுகள்-3:

1906 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் புரட்சிகரமான "இந்தியா" வாரப் பத்திரிக்கை உதயமாகியது.பாரதி பொறுப்பாசிரியர். ந.திருமலாச்சாரி, மாண்டாயம் எஸ். ஸ்ரீனிவாசசாரி, சா.துரைசாமி அய்யர், வி.சக்கரைச் செட்டியார், வா.உ.சி. ஆகியோருடைய நட்பு கிடைத்தது. இதன் மூலம் விபின் சந்திர பாலர் சென்னை வந்த போது அவரை சந்தித்தார். 1907 ஆம் ஆண்டு சுரத் நகரில் திலகர் தலைமையிலான காங்கிரசின் தீவிரவாதக் கோஷ்டியின் மாநாடு நடந்தது.மண்டயம் எஸ். ஸ்ரீனிவாசசாரி,வா.உ.சி. ஆகியோருடன் பாரதி இளைஞர் கோஷ்டியை சுரத் அழைத்துச் சென்றார்.காங்கிரஸில் ஏற்பட்ட பிளவிற்குப் பின் திலகர்,அர்விந்தர்,லஜபதி ராய் ஆகியோரை பாரதி சந்தித்தார். அரசியலில் எதிரியாய் இருந்தாலும், பழுத்த மிதவாதி வி.கிருஷ்ண சாமி அய்யர் பாரதியின் தேசிய கீதங்களில் மோகித்துப் போனார்."சுதேச கீதங்கள்" என்ற தலைப்பில் பாரதியின் மூன்று பாடல்கள் கொண்ட நான்கு பக்கப் பிரசுரங்கள் நிறைய வெளியிட்டு,இலவசமாய் விநியோகித்தார்.அவை தமிழ் மக்களின் தேசிய உணர்வினை தட்டி எழுப்பின.சென்னை காங்கிரஸ் தீவிரவாதக் கொள்கையரின் கோட்டைஆனது. 1908 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ...

பாரதி கவிதைகள்-2

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்.................! பாரதியின் பாடல்களில் மிகவும் புகழ் பெற்றவை அவரின் தேசப்பற்று பாடல்கள். அவற்றில் ஒன்று, விடுதலை............ விடுதலை............ விடுதலை........... 1. பறைய ருக்கு மிங்கு தீயர் புலைய ருக்கும் விடுதலை! பரவ ரோடு குறவ ருக்கும் மறவ ருக்கும் விடுதலை! திறமை கொண்ட தீமை யற்ற தொழில் புரிந்து யாவரும் தேர்ந்த கல்வி ஞான மெய்தி வாழ்வ மிந்த நாட்டிலே. விடுதலை............ விடுதலை............ விடுதலை........... 2. ஏழை யென்றும் அடிமை யென்றும் எவனு மில்லை ஜாதியில், இழிவு கொண்ட மனித ரென்ப திந்தி யாவில் இல்லையே! வாழி கல்வி செல்வ மெய்தி மனம கிழ்ந்து கூடியே மனிதர் யாரு மொருநி கர்ச மான மாக வாழ்வமே விடுதலை............ விடுதலை............ விடுதலை........... 3. மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை யைக்கொ ளுத்துவோம்; வைய வாழ்வு தன்னி லெந்த வகையி னும்ந மக்குள்ளே தாத ரென்ற நிலைமை மாறி ஆண்க ளோடு பெண்களும் சரிநி கர்ச மான மாக வாழ்வ மிந்த நாட்டிலே. விடுதலை............ விடுதலை............ விடுதலை...........

பாரதி வாழ்க்கைப் பதிவுகள்-2:

1898 ஆம் ஆண்டு காசியில் உள்ள தன் அத்தை குப்பம்மாள் வீட்டில் குடியேறினார். அங்கு அலகாபாத் சர்வகலா சாலையில் சேர்ந்து சமஸ்கிருதம், ஹிந்தி மொழிகளில் தேர்ச்சிப்பேற்றார்.காசியில் வாழ்ந்த நாட்களில் பாரதியின் சமூகத்தின் மீதான பார்வை ஒரு குறுகிய வட்டத்தில் இருந்து பரந்து விரிகிறது.ஹிந்துதுவக் கொள்கைகள் மற்றும் தேசியக் கொள்கைகள் மீதான ஒரு தெளிவான கண்ணோட்டம் ஏற்படுகிறது. இக்காலகட்டங்களில் கச்சம், வால்விட்ட தலப்பாகை, முறுக்கு மீசை ஆகியவை பழக்கத்திற்கு வருகின்றன. 1903-1904 ஆண்டுகளில் மீண்டும் எட்டயபுரம் வந்த பாரதிக்கு எட்டயபுரம் மன்னரின் தோழமை கிடைக்கிறது.அவ்வாண்டு மதுரை "விவேகபானு"வில் 'தனிமை இரக்கம்' என்ற முதல் பாடல் அச்சேறுகிறது. ஆனாலும் பாரதிக்கு எட்டயபுரம் சமஸ்தான வேளையில் ஈடுபாடு இல்லாத காரணத்தினால்,1904 ஆம் ஆண்டு மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழ்ப் பண்டிதர் வேளையில் சேர்ந்தார். இதே ஆண்டில் சென்னை சுதேசிமித்திரன் பத்திரிக்கையின் உதவி ஆசிரியராகவும் "சக்ரவர்த்தினி" மாதப் பத்திரிக்கையின் ஆசிரியராகவும் பொறுப்பாற்றினார். 1905 ஆம் ஆண்டு வாங்கப் பிரிவினை எதிர்ப்புக...

பாரதியார் கவிதைகள்-1

கண்ணம்மா - அங்க வர்ணனை பல்லவி எங்கள் கண்ணம்மா நகைபுது ரோஜாப் பூ; எங்கள் கண்ணம்மா விழிஇந்த்ர நீலப் பூ! எங்கள் கண்ணம்மா முகஞ்செந் தாமரைப் பூ; எங்கள் கண்ணம்மா நுதல்பால சூர்யன். சரணங்கள் 1. எங்கள் கண்ணம்மா எழில்மின் னலைநேர்க்கும்; எங்கள் கண்ணம்மா புருவங்கள் மதன் விற்கள்; திங்களை மூடிய பாம்பினைப் போல சேறிகுழல்; இவள் நாசி எட் பூ. 2. மங்கள வாக்கு நிதியானந்த ஊற்று; மதுர வாய்அமிர்தம்; இதழமிர்தம்; சங்கீத மென்குரல் சரஸ்வதி வீணை; சாய லரம்பை; சதுர் அயி ராணி 3. இங்கித நாத நிலைய மிருசெவி; சங்கு நிகர்த்த கண்டம் அமிர்த சங்கம்; மங்களக் கைகள் மஹாசக்தி வாசம்; வயிறா லிலை, இடை அமிர்த வீடு. 4. சங்கரனைத் தாங்கு நந்திபத சதுரம்; தாமரை யிருதாள் லக்ஷ்மீ பீடம்; பொங்கித் ததும்பித் திசையெங்கும் பாயும் புத்தன்பும் ஞானமும் மெய்த்திருக் கோலம்.