பாரதி வாழ்க்கைப் பதிவுகள்-2:

1898 ஆம் ஆண்டு காசியில் உள்ள தன் அத்தை குப்பம்மாள் வீட்டில் குடியேறினார்.
அங்கு அலகாபாத் சர்வகலா சாலையில் சேர்ந்து சமஸ்கிருதம், ஹிந்தி மொழிகளில் தேர்ச்சிப்பேற்றார்.காசியில் வாழ்ந்த நாட்களில் பாரதியின் சமூகத்தின் மீதான பார்வை
ஒரு குறுகிய வட்டத்தில் இருந்து பரந்து விரிகிறது.ஹிந்துதுவக் கொள்கைகள் மற்றும் தேசியக் கொள்கைகள் மீதான ஒரு தெளிவான கண்ணோட்டம் ஏற்படுகிறது.
இக்காலகட்டங்களில் கச்சம், வால்விட்ட தலப்பாகை, முறுக்கு மீசை ஆகியவை பழக்கத்திற்கு வருகின்றன.

1903-1904 ஆண்டுகளில் மீண்டும் எட்டயபுரம் வந்த பாரதிக்கு எட்டயபுரம் மன்னரின் தோழமை கிடைக்கிறது.அவ்வாண்டு மதுரை "விவேகபானு"வில் 'தனிமை இரக்கம்' என்ற முதல் பாடல் அச்சேறுகிறது. ஆனாலும் பாரதிக்கு எட்டயபுரம் சமஸ்தான வேளையில் ஈடுபாடு இல்லாத காரணத்தினால்,1904 ஆம் ஆண்டு மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழ்ப் பண்டிதர் வேளையில் சேர்ந்தார். இதே ஆண்டில் சென்னை சுதேசிமித்திரன் பத்திரிக்கையின் உதவி ஆசிரியராகவும் "சக்ரவர்த்தினி" மாதப் பத்திரிக்கையின் ஆசிரியராகவும் பொறுப்பாற்றினார்.

1905 ஆம் ஆண்டு வாங்கப் பிரிவினை எதிர்ப்புக் கிளர்ச்சியிலும், சமூக சீர்திருத்தத்திலும் பாரதி முழுமையாக ஈடுபடுகிறார்;அரசியலிலும் நாட்டம் ஏற்படுகிறது.
1905 ஆம் ஆண்டு காசியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டு திரும்புகையில்,விவேகானந்தரின் தர்ம புத்த ரியான நிவேதிதா தேவியை சந்தித்தார்; அவரை தன் ஞான குருவாக ஏற்றுக் கொண்டார்.
பெண்ணுரிமை மீதான பாரதியின் பற்று மற்றும் புதுமை பெண் மீதான பாரதியின் கனவு ஆகியவற்றிற்கு இந்த சந்திப்பு ஒரு வித்தை பாரதியின் மனத்தில் அன்றே விதைத்திருக்கலாம்............................!

Comments

Popular posts from this blog

என் கவிதை - முத்துநகர்

மழை-- என் கவிதை.......!

பாரதியார் கவிதைகள்-1