பாரதி வாழ்க்கைப் பதிவுகள்-1:

1882ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் நாள்( சித்திரபானு, கார்த்திகை 27),
மூல நட்சத்திரத்தில்,தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் என்னும் ஊரில் பிறந்தார்.
தந்தை பெயர் சின்னசாமி ஐய்யர்; தாயார் பெயர் லட்சுமி அம்மாள்.
பாரதியாரின் செல்லப் பெயர் "சுப்பையா".
பாரதியாருக்கு ஐந்து வயது நிரம்பும் முன்னரே
தாயார் லட்சுமி அம்மாள் இயற்கை எய்திவிட்டார்கள்.
1889ஆம் ஆண்டு பாரதியாரின் தந்தை மறுமணம் புரிந்தார்.
குழந்தை பருவத்திலேயே பாரதி ஞானக் குழந்தையாக திகழ்ந்தார்.
தன் பத்தாம் வயதிலேயே பாரதி "அருட்கவி"பொழிந்தார்.
1893ஆம் ஆண்டு தன் பதினொன்றாம் வயதில் எட்டயபுரம் சமஸ்தான புலவர்களால் கவித்திறனை சோதிக்கப்பட்டார்; எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
"சுப்பையா"வின் கவித்திறன் கண்டு வியந்த புலவர்கள்
அவருக்கு கலைவானியின் மறு பெயராகிய "பாரதி" என்னும் பட்டம் தந்து போற்றினார். அன்று முதல் சுப்பையா "பாரதி" ஆனார்.
1894ஆம் ஆண்டு முதல் 1897 ஆம் ஆண்டு வரை திருநெல்வேலியில் உள்ள இந்து கலாசாலையில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். பள்ளிப் பருவத்தில் தமிழ்ப் பண்டிதர்களுடன் சொற்போர் நடத்துவதை வழக்காக கொண்டிருந்தார் குழந்தை பாரதி.
1897ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் கீழ்க்கடையத்தில் வாழ்ந்த செல்லப்பா ஐய்யரின் புதல்வி செல்லம்மாளுக்கும் பரதியருக்கும் திருமணம் நடந்தது.
திருமணம் ஆனா மறுவருடமே பாரதியாரின் தந்தை மரணம் அடைந்தார்.
அதன் பின் வாழ்க்கையில் ஏற்பட்ட தொடர் துன்பங்களால் அந்த வருடமே தமிழ்நாட்டை விட்டு வெளியேறி காசியிலுள்ள தன் அத்தை வீட்டில் வாழவேண்டிய நிலை ஏற்பட்டது.
பாரதியாரின் இந்த காசி வாசம் அவரின் வாழ்க்கையில்
பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.........!

Comments

Popular posts from this blog

என் கவிதை - முத்துநகர்

மழை-- என் கவிதை.......!

பாரதியார் கவிதைகள்-1