Posts

Showing posts from 2008

பாரதி வாழ்க்கைப் பதிவுகள்-3:

1906 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் புரட்சிகரமான "இந்தியா" வாரப் பத்திரிக்கை உதயமாகியது.பாரதி பொறுப்பாசிரியர். ந.திருமலாச்சாரி, மாண்டாயம் எஸ். ஸ்ரீனிவாசசாரி, சா.துரைசாமி அய்யர், வி.சக்கரைச் செட்டியார், வா.உ.சி. ஆகியோருடைய நட்பு கிடைத்தது. இதன் மூலம் விபின் சந்திர பாலர் சென்னை வந்த போது அவரை சந்தித்தார். 1907 ஆம் ஆண்டு சுரத் நகரில் திலகர் தலைமையிலான காங்கிரசின் தீவிரவாதக் கோஷ்டியின் மாநாடு நடந்தது.மண்டயம் எஸ். ஸ்ரீனிவாசசாரி,வா.உ.சி. ஆகியோருடன் பாரதி இளைஞர் கோஷ்டியை சுரத் அழைத்துச் சென்றார்.காங்கிரஸில் ஏற்பட்ட பிளவிற்குப் பின் திலகர்,அர்விந்தர்,லஜபதி ராய் ஆகியோரை பாரதி சந்தித்தார். அரசியலில் எதிரியாய் இருந்தாலும், பழுத்த மிதவாதி வி.கிருஷ்ண சாமி அய்யர் பாரதியின் தேசிய கீதங்களில் மோகித்துப் போனார்."சுதேச கீதங்கள்" என்ற தலைப்பில் பாரதியின் மூன்று பாடல்கள் கொண்ட நான்கு பக்கப் பிரசுரங்கள் நிறைய வெளியிட்டு,இலவசமாய் விநியோகித்தார்.அவை தமிழ் மக்களின் தேசிய உணர்வினை தட்டி எழுப்பின.சென்னை காங்கிரஸ் தீவிரவாதக் கொள்கையரின் கோட்டைஆனது. 1908 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ...

பாரதி கவிதைகள்-2

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்.................! பாரதியின் பாடல்களில் மிகவும் புகழ் பெற்றவை அவரின் தேசப்பற்று பாடல்கள். அவற்றில் ஒன்று, விடுதலை............ விடுதலை............ விடுதலை........... 1. பறைய ருக்கு மிங்கு தீயர் புலைய ருக்கும் விடுதலை! பரவ ரோடு குறவ ருக்கும் மறவ ருக்கும் விடுதலை! திறமை கொண்ட தீமை யற்ற தொழில் புரிந்து யாவரும் தேர்ந்த கல்வி ஞான மெய்தி வாழ்வ மிந்த நாட்டிலே. விடுதலை............ விடுதலை............ விடுதலை........... 2. ஏழை யென்றும் அடிமை யென்றும் எவனு மில்லை ஜாதியில், இழிவு கொண்ட மனித ரென்ப திந்தி யாவில் இல்லையே! வாழி கல்வி செல்வ மெய்தி மனம கிழ்ந்து கூடியே மனிதர் யாரு மொருநி கர்ச மான மாக வாழ்வமே விடுதலை............ விடுதலை............ விடுதலை........... 3. மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை யைக்கொ ளுத்துவோம்; வைய வாழ்வு தன்னி லெந்த வகையி னும்ந மக்குள்ளே தாத ரென்ற நிலைமை மாறி ஆண்க ளோடு பெண்களும் சரிநி கர்ச மான மாக வாழ்வ மிந்த நாட்டிலே. விடுதலை............ விடுதலை............ விடுதலை...........

பாரதி வாழ்க்கைப் பதிவுகள்-2:

1898 ஆம் ஆண்டு காசியில் உள்ள தன் அத்தை குப்பம்மாள் வீட்டில் குடியேறினார். அங்கு அலகாபாத் சர்வகலா சாலையில் சேர்ந்து சமஸ்கிருதம், ஹிந்தி மொழிகளில் தேர்ச்சிப்பேற்றார்.காசியில் வாழ்ந்த நாட்களில் பாரதியின் சமூகத்தின் மீதான பார்வை ஒரு குறுகிய வட்டத்தில் இருந்து பரந்து விரிகிறது.ஹிந்துதுவக் கொள்கைகள் மற்றும் தேசியக் கொள்கைகள் மீதான ஒரு தெளிவான கண்ணோட்டம் ஏற்படுகிறது. இக்காலகட்டங்களில் கச்சம், வால்விட்ட தலப்பாகை, முறுக்கு மீசை ஆகியவை பழக்கத்திற்கு வருகின்றன. 1903-1904 ஆண்டுகளில் மீண்டும் எட்டயபுரம் வந்த பாரதிக்கு எட்டயபுரம் மன்னரின் தோழமை கிடைக்கிறது.அவ்வாண்டு மதுரை "விவேகபானு"வில் 'தனிமை இரக்கம்' என்ற முதல் பாடல் அச்சேறுகிறது. ஆனாலும் பாரதிக்கு எட்டயபுரம் சமஸ்தான வேளையில் ஈடுபாடு இல்லாத காரணத்தினால்,1904 ஆம் ஆண்டு மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழ்ப் பண்டிதர் வேளையில் சேர்ந்தார். இதே ஆண்டில் சென்னை சுதேசிமித்திரன் பத்திரிக்கையின் உதவி ஆசிரியராகவும் "சக்ரவர்த்தினி" மாதப் பத்திரிக்கையின் ஆசிரியராகவும் பொறுப்பாற்றினார். 1905 ஆம் ஆண்டு வாங்கப் பிரிவினை எதிர்ப்புக...

பாரதியார் கவிதைகள்-1

கண்ணம்மா - அங்க வர்ணனை பல்லவி எங்கள் கண்ணம்மா நகைபுது ரோஜாப் பூ; எங்கள் கண்ணம்மா விழிஇந்த்ர நீலப் பூ! எங்கள் கண்ணம்மா முகஞ்செந் தாமரைப் பூ; எங்கள் கண்ணம்மா நுதல்பால சூர்யன். சரணங்கள் 1. எங்கள் கண்ணம்மா எழில்மின் னலைநேர்க்கும்; எங்கள் கண்ணம்மா புருவங்கள் மதன் விற்கள்; திங்களை மூடிய பாம்பினைப் போல சேறிகுழல்; இவள் நாசி எட் பூ. 2. மங்கள வாக்கு நிதியானந்த ஊற்று; மதுர வாய்அமிர்தம்; இதழமிர்தம்; சங்கீத மென்குரல் சரஸ்வதி வீணை; சாய லரம்பை; சதுர் அயி ராணி 3. இங்கித நாத நிலைய மிருசெவி; சங்கு நிகர்த்த கண்டம் அமிர்த சங்கம்; மங்களக் கைகள் மஹாசக்தி வாசம்; வயிறா லிலை, இடை அமிர்த வீடு. 4. சங்கரனைத் தாங்கு நந்திபத சதுரம்; தாமரை யிருதாள் லக்ஷ்மீ பீடம்; பொங்கித் ததும்பித் திசையெங்கும் பாயும் புத்தன்பும் ஞானமும் மெய்த்திருக் கோலம்.

பாரதி வாழ்க்கைப் பதிவுகள்-1:

1882ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் நாள்( சித்திரபானு, கார்த்திகை 27), மூல நட்சத்திரத்தில்,தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் என்னும் ஊரில் பிறந்தார். தந்தை பெயர் சின்னசாமி ஐய்யர்; தாயார் பெயர் லட்சுமி அம்மாள். பாரதியாரின் செல்லப் பெயர் "சுப்பையா". பாரதியாருக்கு ஐந்து வயது நிரம்பும் முன்னரே தாயார் லட்சுமி அம்மாள் இயற்கை எய்திவிட்டார்கள். 1889ஆம் ஆண்டு பாரதியாரின் தந்தை மறுமணம் புரிந்தார். குழந்தை பருவத்திலேயே பாரதி ஞானக் குழந்தையாக திகழ்ந்தார். தன் பத்தாம் வயதிலேயே பாரதி "அருட்கவி"பொழிந்தார். 1893ஆம் ஆண்டு தன் பதினொன்றாம் வயதில் எட்டயபுரம் சமஸ்தான புலவர்களால் கவித்திறனை சோதிக்கப்பட்டார்; எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார். "சுப்பையா"வின் கவித்திறன் கண்டு வியந்த புலவர்கள் அவருக்கு கலைவானியின் மறு பெயராகிய "பாரதி" என்னும் பட்டம் தந்து போற்றினார். அன்று முதல் சுப்பையா "பாரதி" ஆனார். 1894ஆம் ஆண்டு முதல் 1897 ஆம் ஆண்டு வரை திருநெல்வேலியில் உள்ள இந்து கலாசாலையில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். பள்ளிப் பருவத்தில் தமிழ்ப் பண்டிதர்களுடன் சொற்போர...
நண்பர்களே.......... இந்த இணைய தனித் தளத்(blog)தில் ஒவ்வொரு வாரமும்மூன்று பதிப்புகளை உங்களுக்காக அளிக்க விரும்புகிறேன். முதல் பதிப்பு தமிழ் மொழியின் மகாகவிஞர்களின் வாழ்க்கை சுவடுகளின் சில பதிப்புகளையும் இரண்டாம் பதிப்பில் அந்த மகாக்கவிகளின் சில படைப்புகளையும் மூன்றாம் பதிப்பில் இக்கால சிறு கவிதைகளில் ஒன்றையும் வெளியிட விரும்புகிறேன். மகாகவி என்று சொன்னதும் முதலில் நினைவுக்குவரும் "மகாகவி" பாரதி அவர்களின் வாழ்க்கைச்சுவடுகளையும், அவரின் சில படைப்புகளையும் வரும் பதிப்புகளில், உங்கள் பார்வைக்கு........................... இப்படிக்கு உங்கள் ஆ.நிரஞ்சன் குமார்

மழை-- என் கவிதை.......!

நாற்று நட்ட நாள்முதலாய் நாவறண்டு போகுமாறு கூப்பிட்டும் எட்டிக் கூடப்பார்க்கா திருந்து அறுவடை செய்யும் நாளன்று மனம் அதனுடன் சேர்த்தழுமாறு - கொட்டும் மழை ஓர் செவிட்டு தெய்வம்.
தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி- மனம் வாடித் துன்பமிக வுழன்று- பிறர் வாடப் பலசெயல்கள் செய்து- நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும்- பல வேடிக்கை மனிதரைப் போலே -நான் வீழ்வே னென்றுநினைத் தாயோ? இந்த பாரதியின் கூற்றுக்கினங்க, பெறர்க் கறிய பெற்றாய் "தமிழ்"யை நாம் தாய் மொழியாய் கொண்ட நாம் அனைவரும் நம் நேரத்தை வீணாக்காமல் "தமிழ்" மேலும் வளர ஒன்றுகூடி உழைப்போம்.........!

முன்னுரை

உலகத்தமிழர் அனைவருக்கும் வணக்கம்.எனக்கு பிடித்தமான, என்னை கவர்ந்த தமிழ் கவிதைகளையும் நான் எழுதிய கவிதைகளையும் இந்த"blog" மூலம் அளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்........