பாரதி வாழ்க்கைப் பதிவுகள்-3:
1906 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் புரட்சிகரமான "இந்தியா" வாரப் பத்திரிக்கை உதயமாகியது.பாரதி பொறுப்பாசிரியர். ந.திருமலாச்சாரி, மாண்டாயம் எஸ். ஸ்ரீனிவாசசாரி, சா.துரைசாமி அய்யர், வி.சக்கரைச் செட்டியார், வா.உ.சி. ஆகியோருடைய நட்பு கிடைத்தது. இதன் மூலம் விபின் சந்திர பாலர் சென்னை வந்த போது அவரை சந்தித்தார். 1907 ஆம் ஆண்டு சுரத் நகரில் திலகர் தலைமையிலான காங்கிரசின் தீவிரவாதக் கோஷ்டியின் மாநாடு நடந்தது.மண்டயம் எஸ். ஸ்ரீனிவாசசாரி,வா.உ.சி. ஆகியோருடன் பாரதி இளைஞர் கோஷ்டியை சுரத் அழைத்துச் சென்றார்.காங்கிரஸில் ஏற்பட்ட பிளவிற்குப் பின் திலகர்,அர்விந்தர்,லஜபதி ராய் ஆகியோரை பாரதி சந்தித்தார். அரசியலில் எதிரியாய் இருந்தாலும், பழுத்த மிதவாதி வி.கிருஷ்ண சாமி அய்யர் பாரதியின் தேசிய கீதங்களில் மோகித்துப் போனார்."சுதேச கீதங்கள்" என்ற தலைப்பில் பாரதியின் மூன்று பாடல்கள் கொண்ட நான்கு பக்கப் பிரசுரங்கள் நிறைய வெளியிட்டு,இலவசமாய் விநியோகித்தார்.அவை தமிழ் மக்களின் தேசிய உணர்வினை தட்டி எழுப்பின.சென்னை காங்கிரஸ் தீவிரவாதக் கொள்கையரின் கோட்டைஆனது. 1908 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ...